
நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.அவருடன் இணைந்து கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக ஆக்ஷ்ன் கமர்ஷியல் ஜானரில் உருவாக இருக்கிறது. அதுவும் ஒரு நாற்காலிக்கு 4 கேங்க்ஸ்டர்கள் போட்டி போடுகிறார்கள். கடைசியில் அந்த நாற்காலியில் அமர போவது யார் என்பது தான் படத்தோட கதை. சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது. படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் கோவாவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.