
பஞ்சாப் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில், குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ், பரித்கோட் பகுதியில் டிரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. பின்னர் பஸ் அருகில் இருந்த சாக்கடையில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 26 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். ‘இரண்டு வாகனங்களும் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.