Saturday, April 19, 2025
Homeசெய்திகள்திருமலையில் மார்ச் 9 -13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

திருமலையில் மார்ச் 9 -13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

5 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த தெப்பத்திருவிழாவில் தினமும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.திருமலையில் தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த தெப்பத்திருவிழாவில் முதல் நாளான மார்ச் 9-ம் தேதி, சீதா சமேத ஸ்ரீராமர், லட்சுமணர், அனுமன் ஆகியோர் 3 சுற்று உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.

மார்ச் 10-ம் தேதி பாமா, ருக்மணி சமேராய் ஸ்ரீ கிருஷ்ணர் 3 சுற்று உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதனை தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவர் மலையப்பர் 5 முதல் 7 சுற்றுகள் வரை உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

இதனையொட்டி, மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை திருமலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments