Saturday, April 19, 2025
Homeசெய்திகள்கைதி 2க்கு பிறகு ரோலக்ஸ் படத்தை இயக்க இருக்கும் லோகேஷ்.

கைதி 2க்கு பிறகு ரோலக்ஸ் படத்தை இயக்க இருக்கும் லோகேஷ்.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ்.

எனவே கூலி படத்திற்கு பிறகு அவர் என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏற்கனவே வெளியான தகவலின் படி லோகேஷ், கூலி படத்தை முடித்த பின்னர் கார்த்தியின் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்றும் இந்த படம் தொடர்பான ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது கைதி 2 படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் கைதி 2- க்கு உடனடியாக ‘ரோலக்ஸ்’ படத்தை இயக்க இருக்கிறாராம். கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே சூர்யாவின் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று இருந்தாலும் திரையரங்கையே அதிர வைத்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்திற்கு பிறகு உடனடியாக ரோலக்ஸ் படத்தை இயக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த படத்தை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் மட்டும் இல்லாமல் வெங்கி அட்லூரி, பசில் ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments