
மத்திய அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு BSNL நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வந்தது. இந்நிலையில் அண்மையில் BSNL நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் செல்லத் தொடங்கிய நிலையில், 3ஆவது காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு லாபம் ரூ.262 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொபைல் சேவைகளின் வளர்ச்சி 15% ஆகவும், இணையதள சேவை வருவாய் 18%-ம் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் BSNL-ல் 4G சேவையை மேம்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 5G சேவையை வழங்குவது குறித்த தயார் நிலையை பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.