Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம்.

தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிலம்பரசனின் 49-வது படம் ஆகியவற்றைத் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அடுத்து தயாரித்து, இயக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். பிரக்யா நாக்ரா, ரக்‌ஷன், கயாது லோஹர், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ஜோனிதா காந்தி, இசை அமைப்பாளர் தமன், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன் என பலர் நடிக்கின்றனர். சாய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். இதன் டைட்டில் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.

நடிகர் அதர்வா பேசும்போது, “ஒரு தலைக் காதல் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் ‘இதயம்’ முரளி, என்னுள்ளும் இதயம் முரளி இருக்கிறான். எல்லோருக்குள்ளும் இருக்கிறான். அதைக் கொண்டாடும் வகையில் அழகான காதல் படமாக இது இருக்கும். ஆகாஷ்பெரிய தயாரிப்பாளர். அவரை இயக்குநராகத்தான் தெரியும். இந்தக் கதையை 2017-ம் ஆண்டு சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார். இப்போது இந்தப் படம் பண்ணலாம் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இது நல்ல படமாக இருக்கும்” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments