
சென்னையில் இன்று (பிப்.,15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7,890க்கும், ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்.,15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7,890க்கும், ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.