
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
தேர்வுகளை சுமுகமாக நடத்தும் வகையில், நேற்று சி.பி.எஸ்.இ.,யின், யு டியூப் சேனல் வாயிலாக, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.