
பாடலாசிரியர் சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு “காதல்” மற்றும் “கவிதை” என்று நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.
கவிஞர் சினேகனுக்கும் சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகை கன்னிகாவுக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அண்மையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனை சினேகன் குடும்பத்தினர் சந்தித்தனர். இந்த சூழலில் பெண் குழந்தைகளுக்கு காதல் மற்றும் கவிதை என கமல்ஹாசன் பெயர் சூட்டியிருப்பதுடன் தங்க வளையல்களையும் அணிவித்ததாக சினேகன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.