
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் கடந்த சில ஆண்டுகளில் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுகளுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
அதன்படி, அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாக்கு மகாராஜ் போன்ற படங்களுக்கு தமன் இசையமைத்திருந்தார். தற்போது பாலகிருஷ்ணா நடித்து வரும் அகண்டா 2 படத்திற்கும் தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் , தமனுக்கு போர்ஸ் கார் ஒன்றை பாலகிருஷ்ணா பரிசாக வழங்கி இருக்கிறார். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.