Tuesday, April 8, 2025
Homeசெய்திகள்ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு.

ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு.

இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி உட்பட வெளி நாடுகளில், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.2030-ம் ஆண்டு செயல் திட்டத்தை வெளியிட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDC) கூறியிருப்பதாவது: திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற NSDC முயற்சிக்கிறது. இதற்காக திறன்மேம்பாட்டு மையங்கள் விரிபடுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 50 எதிர்கால திறன் மையங்கள், 10 சர்வதேச அகாடமிகள் ஆகியவை தொடங்கப்படவுள்ளன.

NSDC ஏற்கெனவே 4 கோடியே 3 லட்சம் பேருக்கு பயற்சி அளித்துள்ளது. 94 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 40,000 திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் 1 கோடியே 83 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இவர்களில் 1 கோடியே 29 லட்சம் பெண்கள் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிறப்பு திறன் படைத்தவர்கள். எதிர்காலத்தில், 2 கோடியே 50 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படவுள்ளன. திறன் மையங்களின் எண்ணிக்கையை 50,000-மாக விரிவுபடுத்தப்படவுள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர்களின் தயார்நிலையை வலுப்படுத்த, புதிதாக உருவாகிவரும் 12 முக்கிய தொழில்நுட்பங்களில், தொழில்துறையுடன் இணைந்த திட்டங்களின் எண்ணிக்கை 300-க்கு மேல் உயர்த்தப்படும். பயிற்சி கட்டமைப்புகள் 2.7 லட்சம் சதுர அடிக்கு மேல் நிறுவப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் இதர நாடுகளில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரை பணியமர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு NSDC தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments