
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும் அதனை எடிட் செய்து கொடுத்ததே தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.