
புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் பழமையான வீட்டிற்கு அருகே ரித்திக், தேவா, ஆதி ஆகிய 3 பேர் இன்று (பிப்.,14) வெட்டு காயங்களுடன் கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதில் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரித்திக் , திடீர் நகரைச் சேர்ந்த தேவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதே பகுதியை சேர்ந்த சத்தியா என்பவருக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
