Friday, April 4, 2025
Homeசெய்திகள்புதிய பாம்பன் ரயில் பாலத்தை மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

புதிய பாம்பன் ரயில் பாலத்தை மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜன.,31ல் ரயில் இயக்கி ஒத்திகை சரி பார்க்கப்பட்டது ஒத்திகையின் போது, துாக்கு பாலங்களை மூடியதும் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட சென்னை போர்ட் மெயில் ரயில் 22 காலிப்பெட்டிகளுடன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது.

இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மார்ச்சில் நடக்கும் என்றும், பிரதமர் மோடி திறந்து வைப்பதாகவும், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் திறப்பு விழா நடக்கவுள்ள இடத்தை ஆர்.என்.சிங் பார்வையிட்டார். திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி இந்திய ரோந்து கப்பலில் இருந்தபடி புதிய பாலத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலத்தின் சிறப்பம்சங்கள்-புதிய ரயில் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது. பாலத்தின் மைய பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு, 600 டன் எடையில் செங்குத்து இரும்பு தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக அறை கட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments