
காதலர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம், தற்போது உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குறிப்பிட்ட நாளில், ஒருவர் தான் விரும்பும் மற்றொருவருக்கு ப்ரபோஸ் செய்கிறார்கள்.

இந்த ஆண்டு காதலர் தினம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அன்று வருகிறது. அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடங்களில், செயிண்ட் வேலன்டைனின் (புனித வேலன்டைன்) பெயரால் அன்புக்குரியவர்களிடையே இனிப்புகள், பூக்கள் மற்றும் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.