
டிராகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(பிப்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின் படக்குழுவினர் குறித்து பேசிய பிறகு ‘பேட் கேர்ள்’ பட சர்ச்சை குறித்து பேசினார். அவர் பேசியதாவது: “பேட் கேர்ள்’ படம் எடுத்தது ஒரு பெண். ட்ரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. அதிலும் ஒரு பெண் எடுத்த ஒரு படத்தை வெளிவர விடாமல் தடுக்கிறார்கள். ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து அரசியல்வாதிகளிடம் பேசி சென்சாரில் கட் செய்ய வேண்டியவற்றை கட் செய்து அந்த படத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டும். ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று” இவ்வாறு மிஷ்கின் பேசினார்.