
’அருவி’ இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘சக்தி திருமகன்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‘காதல் ஓவியம்’ கண்ணன். ’காதல் ஓவியம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் கண்ணன். சில படங்களுக்குப் பிறகு முழுமையாக திரையுலகிலிருந்து விலகினார். தற்போது ‘சக்தி திருமகன்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
குடும்ப உறவுகள், அதிரடி சண்டைகாட்சிகள் மற்றும் எமோஷனல் நிறைந்த ’சக்தி திருமகன்’ படம், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 25-வது படமாகும். மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் இதனை தயாரித்துள்ளது.
இதில் ‘காதல் ஓவியம்’ கண்ணன், வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிராஸ்தா உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.