Thursday, April 17, 2025
Homeசெய்திகள்புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கு வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கு வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து அடுத்த தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கு வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் கடந்த 2022ம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். வரும் பிப்ரவரி 18ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர், மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக தேர்தல் நியமன கமிஷனர்கள் நியமன சட்ட திருத்த மசோதா 2003ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.

இதன் படி பிரதமர் , எதிர்க்கட்சிதலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரை சேர்க்க வலியுறுத்தியது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் வரும் 18-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுவதால், அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யார் என்பது குறித்து இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் சூரியகாந்த், கோட்டீஸ்வர்சிங் அமர்வு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments