
வடக்கு இலங்கை பகுதியில் தொடங்கப்பட உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்கு அனுமதி வழங்குவது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சட்டப்போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அத்திட்டத்தில் இருந்து அதானி க்ரீன்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.
உள்ளூர் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியே அண்டைநாட்டில் அதானி நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதை நிறுவனத்தின் இந்த முடிவு சுட்டிக்காட்டுகிறது. அதானி குழுமத்தின் இந்த முடிவு இலங்கையின் அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கான வெற்றியாக கருதப்படுகிறது. கடந்த 2024-ம் செப்டம்பரில் நாட்டின் உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, இந்த திட்டத்தை ரத்து செய்வேன் என்று சபதம் செய்திருந்தார். என்றாலும், அவரது அரசு அமைந்ததும், திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது.
திட்டத்தில் இருந்து விலகுவது குறித்து அதானி குழுமம் பிப்.,12ம் தேதி வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை இலங்கை அரசு நியமித்துள்ள நிலையில், இலங்கையின் இறையாண்மை மற்றும் அதன் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஏற்கனவே கூறப்பட்ட திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.