
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட செண்பகராமன் புதூர், தோவாளை, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (பிப்.13) காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை நடக்கிறது.
இதனால் செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல் மின்நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்குச் சிரமம் கொடுக்காமல் பணிகளைச் செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.