
மறைந்த விஞ்ஞானியும், இந்தியாவின் ‘எடிசன்’ என்று அழைக்கப்படுபவருமான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் மாதவன் நடிக்க உள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ’ராக்கெட்ரி’ படத்தை மாதவன் இயக்கி நடித்திருந்தார். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. ராக்கெட்ரி படத்திற்கு பிறகு மீண்டும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிக்க உள்ளார். விளம்பரப் படங்களை இயக்கும் கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
ராக்கெட்ரி படத்தைப் போலவே இந்த படத்தையும் நடிகர் மாதவன் உள்ளிட்டோர் தயாரிக்க உள்ளனர். ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோவையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. படத்தின் டைட்டில் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக் குழு அறிவித்துள்ளது.