
‘சுழல் 2’ வெப் சீரிஸ் 28-ம் தேதி அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகிறது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சுழல் 2’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வா – குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.
‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘சுழல்’ இணையத் தொடர்.