
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
‘மதகஜராஜா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களுக்கு சுந்தர்.சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதற்கு முன்பே ஒப்பந்தமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் கதை விவாதப் பணிகளும் முடிவு பெறும் நிலையில் உள்ளன.
தற்போது அப்படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ‘மூக்குத்தி அம்மன் 2’ எப்போது தொடங்கும், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. முதல் பாகம் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளது மட்டும் உறுதியாகி இருக்கிறது. விரைவில் இதன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பில் நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நாயகனாக நடித்தது மட்டுமன்றி இயக்கியும் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் மாபெரும் வரவேற்பால் 2-ம் பாகம் உருவாகிறது. இதனை ஆர்.ஜே.பாலாஜி இயக்காமல் சுந்தர்.சி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.