Wednesday, April 9, 2025
Homeசெய்திகள்புனேயில் ஜி.பி.எஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு.

புனேயில் ஜி.பி.எஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு.

மஹாராஷ்டிராவில் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் குய்லின் பார் சிண்ட்ரோம் எனப்படும் அரிய வகை நரம்பியல் நோய் பரவி வருகிறது. மனிதர்களின் நரம்பு மண்டலம், மூளை ஆகியவை இந்த நோயால் பாதிக்கப்படுகிறது.அரியவகையான இந்த நோயால் நான்டெட், கிர்கித்வாடி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந் நிலையில், மாநிலத்தில் மொத்தம் 197 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை கூறி உள்ளது. அவர்களில் 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 7 பேர் இது வரை பலியாகி இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை 48 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 21 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments