
அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரைகளையும் விலக்கி நடைபெறும் ஜோதி தரிசனம் தொடங்கியுள்ளது.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ஆம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் மற்றும் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தைப்பூசத் திருவிழா, அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர்.