
தமிழ்நாட்டில் கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உட்பட 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தியும், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக சந்திரமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மீண்டும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், மின்சார வாரிய தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறைச் செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.