
தேனி அருகே இலவசமாக இறைச்சி கேட்டு தராததால் ஆத்திரத்தில் மாயனத்தில் இருந்து சடலத்தை கொண்டு வந்து கடைக்கு முன்பு போட்டுச் சென்ற நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் மணியரசன் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 9) ஞாயிற்றுக் கிழமை என்பதால் இறைச்சி வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர், மணியரசனிடம் தனக்கு இலவசமாக இறைச்சி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கூலித்தொழிலாளியான குமார் அவ்வப்போது அங்கிருக்கும் மாயனத்தில் குழி தோண்டும் பணி செய்பவர் ஆவார்.
குமார் இலவசமாக இறைச்சி கேட்டு அதற்கு கடை உரிமையாளரிடம் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் கறி தர மறுத்ததால் ஆவேசத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரத்தில் மயானத்தில் புதைக்கப்பட்ட ஒரு சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பாக போட்டுச் சென்றுள்ளார்.