
கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயிலில், 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை தந்து கீழே தள்ளிவிடப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைதாகி உள்ளார்.போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி, கோவையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில், பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார்.
அப்போது, சிலர் திடீரென இந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறியிருக்கிறார்கள். இதைப்பார்த்த அந்த பெண் இது பெண்கள் மட்டும் பயணிக்கக் கூடிய பெட்டி என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் கீழே இறங்கவில்லை. ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது இளம் பெண் கழிவறைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது, அப்பெண்ணுக்கு அந்த கும்பல் பாலியல் தொல்லை தந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்து அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போதுகூட அந்த கும்பல் எதற்கும் அசராமல் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலிலிருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டது. இதைப் பார்த்த சக பயணிகள் சிலர் உடனடியாக சத்தம் போட்டுள்ளனர். ஆனால், அந்த கும்பல் உடனே வேறு பெட்டிக்கு சென்றுவிட்டனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள். மர்ம நபர்களை பிடிக்க ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியும் ஆரம்பமானது. இந்நிலையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதையடுத்து, பயணிகள் சிலர் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே அவர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு, தகவல் தெரியப்படுத்திய நிலையில், ரயில் சென்ற பாதையில் ரயில்வே போலீசார் தேடுதல் வேட்டையை துவங்கினார்கள்.
அப்போது தான் கே.வி.குப்பம் அருகே கர்ப்பிணிப் பெண் தண்டவாளத்திற்கு மிக அருகில் விழுந்து கிடந்ததை கண்டனர். கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த கர்ப்பிணியை மீட்ட போலீசார் உடனடியாக அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சோதனையில் அந்த பெண்ணுக்கு கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.
மெடிக்கல் செக்கப்புக்காக, தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக இந்த ரயிலில் பயணம் செய்துள்ளார் இளம்பெண். இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் தெரியாதது போல, வேறொரு பொதுப்பெட்டிக்கு சென்று தப்பிவிட்டார்களாம்.
இந்நிலையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாக, நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.