
தங்கம் விலை தினமும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையானது. கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60,200-க்கு விற்பனையானது. 24-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,440-க்கும், 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது. 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது. மறுநாள் 31-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.960 ஆக அதிகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.
பிப்.1-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம், சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,790-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகி புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,240-க்கும் விற்பனையானது. மேலும், கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.68,984-க்கு விற்பனையானது. தங்கம் விலை தினமும் அதிகரித்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.