
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரசும் தீவிரமாகப் பரப்புரை செய்து வந்தன.
பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.