
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,நாளை (06.05.202) ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி இரவு 2 மணிவரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டும்) திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.