Sunday, April 6, 2025
Homeசெய்திகள்நடிகை புஷ்பலதா 87வது வயதில் மறைவு.

நடிகை புஷ்பலதா 87வது வயதில் மறைவு.

நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்.கடந்த 1961ம் ஆண்டு, ‛கொங்கு நாட்டு தங்கம்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா. தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருந்தார்.

ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து ‛நானும் ஒரு பெண்’ என்ற படத்தில் நடித்த போது அவருடன் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த அவர் வயது மூப்பின் காரணமாக தனது 87வது வயதில் நேற்று (பிப்.,4) காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments