
ஈரோடு சம்பத்நகரில் உள்ள வாக்குசாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்’ என்றார்.