Friday, April 4, 2025
Homeசெய்திகள்3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய தாயின் காதலனின் கொடூர சம்பவம்.

3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய தாயின் காதலனின் கொடூர சம்பவம்.

ஆந்திராவில் 3 குழந்தைகளை, தாயின் காதலர் செல்போன் சார்ஜர் வயரால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நெஞ்சை துடிதுடிக்க வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 3 குழந்தைகளுடன் அதே ஊரில் வசிக்கும் பவனுடன் வாழ்ந்து வருகிறார். சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்போன் சார்ஜர் வயரை பயன்படுத்தி 3 குழந்தைகளையும் பவன் கடுமையாக தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடம்பில் காயம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments