
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. நேற்று (பிப்.3) தங்கம் விலை இறங்கி இருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ. 7,810 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.62,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.