
நடிகர்கள் சித்தார்த், நயன்தாரா, மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
YNOT Studio தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சசிகாந்த் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’.
இந்தப் படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். பாடகரான அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.