
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்பகுதியில் மற்றொரு சரக்கு ரயில் மோதியதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஷுஜாத்பூர் ரசுலாபாத் இடையே அதிகாலை 4.30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. நின்றிகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்பகுதியில் வந்து மோதியது. இந்த சம்பவத்தில் வேகமாக வந்த இரண்டாவது ரயிலின் இன்ஜின் தடம்புரண்டது. இத்தனை பெரிய விபத்திலும் நல்வாய்ப்பாக இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.