
அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை சார்பில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கள் நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்து உள்ளது.
இவர்களை கணக்கெடுக்கும் அந்த நாட்டு அரசு, சட்டவிரோதமாக வந்தவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்தியர்கள் 205 பேர் ஆறு மணி நேரத்திற்கு முன்பு டெக்சாஸிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
புள்ளிவிவரங்களின்படி சுமார் 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசிப்பதாகத் தெரிகிறது. மொத்தமாக அமெரிக்காவில் 10.5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.