
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிருந்து பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால் மின்சார ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக இயங்கும் நேரத்தை விட சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் குறைந்தது 15 நிமிட தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோன்று சென்னை விமான நிலையத்திலும் சில விமானங்கள் புறப்படுவது தாமதம் அடைந்தது.