
‘ஈரம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அறிவழகன் – நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சப்தம்’ படம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் அறிவழகன். தொடர்ந்து, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கினார். சோனி லிவ் ஓடிடியில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸையும் இயக்கியிருந்தார்.
அவர் இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘சப்தம்’. இந்தப் படத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ளார். 7ஜி சிவா தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் ஆதியுடன் நடித்துள்ளனர்.