
7வது கிராமி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆல்பத்திற்காக பாடகி பியான்ஸூக்கு விருது வழங்கப்பட்டது.
இசையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, கிராமி விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலில் நடந்து வருகிறது.
மொத்தம் 94 பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக பியான்ஸின் ‘கவ்பாய் கார்ட்டர்’ தேர்வானது. 11 பிரிவுகளில் பெயான்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சந்திரிகா டன்டான், படகராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவரது திரிவேணி என்ற ஆல்பம், New Age, Ambient or Chant Album பிரிவில் விருதை வென்றது. இது அவரது 2வது கிராமி விருதாகும். இவர் ஏற்கனவே, 209ல் ‘SOUL CALL’ என்ற ஆல்பத்திற்காக விருது வென்றிருந்தார்.