
வாஷிங்டனில் பயணிகள் விமானம் ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை மீட்கும் முன்பே அமெரிக்காவில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனில் பயணிகள் விமானம் ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை மீட்கும் முன்பே அமெரிக்காவில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள பிலந்தெல்பியா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, 30 நொடிக்குள் ரேடாரில் இருந்து மறைந்தது. அடுத்த சில நொடிகளில், சுமார் ஆயிரத்து 600 அடி உயரத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம், தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 2 உடல்களை கண்டெடுத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.