
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் லேசான காயத்துடன் பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து மணப்பாறை யாகபுரம் என்ற பகுதியில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது.