Saturday, April 5, 2025
Homeசெய்திகள்பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை.

பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை.

வேலுார் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு பெண் மருத்துவரும், அவரது நண்பரும் வேலூர் – காட்பாடி – திருவலம் சாலையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றனர். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணிக்கு இருவரும் தியேட்டர் முன் ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.

இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு சென்றனர். தாங்கள் ஷேர் ஆட்டோ தான் என்றும் ஏறிக் கொள்ளலாம் என்றவுடன் அவர்களை நம்பி இருவரும் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.

காட்பாடியில் இருந்து வேகமாக சென்ற ஆட்டோ, கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி அணுகு சாலையில் திரும்பியுள்ளது. பதற்றமடைந்த இருவரும் கேட்டதற்கு சாலையை மறைத்து வேலை நடப்பதாக டிரைவர் கூறியிருக்கிறார்.

அணுகு சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ, சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றங் கரைக்கு சென்றது. இருவரின் அதிர்ச்சி விலகும் முன்பு, அந்தக் கும்பல் பாலாற்றங்கரையில் அவர்களை ஆட்டோவில் இருந்து இறக்கியது.

அவர்களில் ஒருவர் ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டார். மற்ற 4 பேரும், ஆண் நண்பரின் கண் முன்னால் பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு கொடுமைக்கு ஆளாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டு விடுவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு வேலுார் மகளிர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்,குற்றவாளிகள் 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளான பார்த்திபன், பரத், மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 பேரும் தலா 20 ஆண்டுகள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments