
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.60,000 என்ற விலையைத் தாண்டியது. இந்த நிலையில், இன்று ரூ.61,000த்தை கடந்துள்ளது தங்கம் விலை.
நேற்று (ஜன.30ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,610க்கும் ஒரு சவரன் ரூ. 60,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாத கடைசி தினமான இன்று (ஜன.31ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,730க்கும் ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ. 61,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.