
அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை, ஆனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இதுவரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.