நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு “பராசக்தி” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தலைப்பை ஏற்கனவே நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அனுமதி பெற்ற அந்த கடிதத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி கடந்த வருடம் ஜூலை மாதமே இதற்கான அனுமதியை பெற்று இருக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், படத்தின் தலைப்பை சிவகார்த்திகேயன் படக்குழு மாற்றுமா அல்லது விஜய் ஆண்டனி தரப்பில் சமரசமாக செல்லுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த விவாதம் இணையப் பக்கங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இசையமைப்பாளர் டி. இமானுடன் இருக்கும் பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, தற்போது இன்னொரு இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியுடனும் பஞ்சாயத்துக்கு ரெடியாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன் தரப்பும் இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இரு தரப்பினரும் இந்த விவகாரத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
