இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட புதுமையான விஷயங்களுடனும் அதிகப்படியான டாஸ்க்குகளுடனும் அரங்கேறி ரசிகர்களை கவர்ந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மிக்சர் திங்காமல் விளையாட முதல் நாளில் இருந்தே ஆரம்பித்தனர். 24 மணி நேர எவிக்ஷன் என சாச்சனாவை வெளியேற்றி பின்னர் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக அதே வாரத்திற்குள் வீட்டுக்கு அழைத்து வந்ததும் அதே போலத்தான் பணப்பெட்டி டாஸ்க்கிலும் கோல்மால் நடக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களுக்கு இந்த டாஸ்க் செம ட்விஸ்ட்டாகவும் சீட் எட்ஜ் த்ரில்லராகவும் அமைந்தது.

பிக் பாஸ் சீசன் 8 இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். லாஸ்லியா, மாகாபா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்களும் உள்ளே வர ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.