நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
சில நாட்கள் மட்டுமே ராஷ்மிகா மந்தனாவுக்கு வருங்கால கணவராக இருந்தார் ரக்ஷித் செட்டி. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் தங்களுடைய நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்வதாகவும் திருமணம் செய்து கொள்ளும் யோசனை என்னிடம் இல்லை என்றும் ராஷ்மிகா மந்தனா அறிவித்திருந்தார்.இது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒரே திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்திருந்த இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.
அந்த படங்களில், நடிகர் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை பார்த்து சினிமாவில் தொடர்ந்து பயணிக்கலாம் என்ற முடிவில் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தை நிறுத்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா-வின் முன்னாள் வருங்கால கணவர் ரக்ஷித் செட்டி கூறியதாவது, ராஷ்மிகா மந்தனா நான் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறேன். அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய கனவு இருக்கிறது.
அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. என்னவென்றால், தான் தன்னுடைய கனவை நோக்கி பயணிப்பதை அவர் ஒரு நாளும் நிறுத்த மாட்டார். அந்த பழக்கம் தற்போது அவரிடம் இருக்கிறது.
தன்னுடைய கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிறைய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய கனவுகளை எட்டுவதற்கு நாம் துணை நிற்க வேண்டும். அவருடைய கனவு தான் எனக்கு முக்கியம் என்று பதிவு செய்திருக்கிறார்.
முதன் முதலில் நடித்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ரக்ஷித் செட்டி என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பின் போது ரக்ஷித் செட்டியுடன் காதல் வயப்பட்டார் ராஷ்மிகா மந்தனா அந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் ராஷ்மிகா மந்தனா. தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு அதனை முறித்துக் கொண்டார் என்றாலும் கூட தற்போதும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன் என்று குண்டை தூக்கி போட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.