விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

0
313

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தை நாராயண மூர்த்தி இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை காயத்ரி ஜெயராமன்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. கன்னடம் தெலுங்கு என நினைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றிய கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது, சினிமாவில் நிறைய நடிகர்கள் நடிகைகளை தொந்தரவு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய் படங்களில் நடிக்கும் போது அந்த படக்குழுவில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும்.

மற்ற படப்பிடிப்பு தளங்களில் அப்படி இருக்குமா..? என்று எனக்கு தெரியாது. ஆனால் விஜய் படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பை கண்கூடாக பார்க்க முடியும்.

அவருடைய பார்வை ஒன்று மட்டும் போதும் படப்பிடிப்பு தளமே கட்டுப்பாடாக இருக்கும். பெண்களுக்கு எதிரான எந்த விஷயமும் அங்கு நடக்காது. கிண்டல், கேலி போன்ற விஷயங்கள் எல்லாம் அங்கு நடக்க வாய்ப்பே இல்லை.

அதனால் தான் பல நடிகைகள் அவருடைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற விரும்புகிறார்கள். நானும் நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போதும் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு ஓகே தான்.

விஜய் இருக்கும் இடத்தில் டூ பீஸ் நீச்சல் உடைகள் கூட நடிக்கலாம் எனக்கு அங்கே பாதுகாப்பு இருக்கும் என பேசி இருக்கிறார் நடிகை காயத்ரி ஜெயராமன்.